BREAKING NEWS
latest

Bahrain News - Arab Tamil Daily - The 24×7 Gulf News

Latest Bahrain News News, Articles, Bahrain News Images, Videos, Full-Time GCC Arabic News in Tamil, Film, Entertainment, Politics, and Sports Updates from Arab Tamil Daily.

Wednesday, August 25, 2021

பஹ்ரைனில் கார்-லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் 5 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்

பஹ்ரைனில் இரு வாகனங்கள் மோதி ஏற்பட்ட பயங்கரமான விபத்தில் 5 வெளிநாட்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்

Image : விபத்தில் சிக்கிய கார்

பஹ்ரைனில் கார்-லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் 5 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்

பஹ்ரைனில் கார்-லாரி மோதி ஏற்பட்ட பயங்கரமான விபத்தில் 5 பேர் பலியாகினர். இந்த சம்பவம் Salman Industrial பகுதியில் நே‌ற்று இரவு நடந்தது. இடியின் தாக்கத்தால் கார் முற்றிலும் சேதமடைந்தது. இறந்தவர்களின் உடல் பாகங்கள் சாலையில் சிதறியதாக நேரில் பார்த்தவர்கள் கூறினர். இந்த பயங்கரமான விபத்தில் லாரியில் இருந்த ஒருவர் மட்டும் உயிர் தப்பினார். இறந்தவர்கள் வெளிநாட்டு தொழிலாளர்கள் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. இறந்த 5 பேரில் 2 பேர் பாகிஸ்தான் நாட்டவர்கள், மேலும் 2 பேர் பங்களாதேஷ் நாட்டவர்கள் என்பதும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மீதியுள்ள ஒருவர் யார் என்பது கண்டறிய முடியவில்லை. உடல்கள் உருக்குலைந்த நிலையில் அடையாளம் காண்பது கடினமாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பஹ்ரைனுக்கான பங்களாதேஷ் தூதர் முகமது நஸ்ருல் இஸ்லாம் அவர்கள் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து தனக்குத் தெரிவிக்கப்பட்டது என்றும், அவர் உயிரிழந்த நபர்கள் பணிபுரிந்த நிறுவனத்தின் உரிமையாளருடன் பேசினார் என்றும் கூறினார். சட்ட நடவடிக்கைகள் முடிக்கப்பட்டு அவர்களின் உடல்களை குடும்பத்தினருக்கு அனுப்பி வைக்க ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Add your comments to Bahrain News

Sunday, June 13, 2021

இந்தியர்களுக்கான புதிய வேலை விசாக்களை பஹ்ரைன் நாடு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது

இந்தியர்களுக்கான புதிய வேலை விசாக்களை பஹ்ரைன் நாடு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக இன்று அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளது

Image : பஹ்ரைன் விமான நிலையம்

இந்தியர்களுக்கான புதிய வேலை விசாக்களை பஹ்ரைன் நாடு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது

இந்தியர்களுக்கு புதிய பணி விசாக்களை(New Work Visa) வழங்குவதை பஹ்ரைன் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. மேலும் புதிய விசா தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இந்தியா உட்பட ஆறு நாடுகளின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. Labor Market Regulatory Authority இந்த புதிய நடவடிக்கை தொடர்பான செய்தியை இன்று(13/06/21) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இந்தியாவை தவிர இலங்கை,பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் மற்றும் வியட்நாம் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களுக்கும் புதிய வேலை விசா வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகள் ரெட் லிஸ்டில் இடம்பெற்றுள்ள நிலையில் இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நாடுகளில் கோவிட் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பின்னரே புதிய விசா வழங்கல் மீண்டும் தொடங்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மற்றோரு அறிவிப்பு வெளியாகும் வரையில் இந்தியா,இலங்கை உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த மக்கள் தற்போதைய சூழ்நிலையில் பஹ்ரைன் நாட்டின் புதிய வேலை விசாவுக்காக பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம். இந்த செய்தியை மற்றவர்களுக்கு பகிர்வு செய்யவும்.

Add your comments to Bahrain News

Friday, May 21, 2021

பஹ்ரைன் வழியாக இன்று முதல் மற்ற நாடுகளுக்கு பயணிக்க முடியாது;புதிய விதிமுறை நடைமுறையில் வந்துள்ளது

பஹ்ரைன் வழியாக சவுதி உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல முடியாது;இன்று முதல் புதிய விதிமுறை நடைமுறையில் வருகின்றன என்ற தகவ‌ல் வெளியாகியுள்ளது

பஹ்ரைன் வழியாக இன்று முதல் மற்ற நாடுகளுக்கு பயணிக்க முடியாது;புதிய விதிமுறை நடைமுறையில் வந்துள்ளது

பஹ்ரைனின் புதிய முடிவு இந்தியாவில் இருந்து சவுதி உள்ளிட்ட நாடுகளுக்கு திரும்ப விரும்பும் வெளிநாட்டவர்களை பெரிய அளவில் பாதிக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. வேலை விசா(Resident Visa) இல்லாதவர்களை பஹ்ரைனுக்கு அனுமதிப்பதில்லை என்ற முடிவு இன்று(21/05/21) முதல் நடைமுறைக்கு வருகின்றன. இந்தியா உட்பட 20 நாடுகளைச் சேர்ந்தவர்கள் சவுதி உள்ளிட்ட நாட்களுக்கு நுழைவதற்கு முன்பு 14 நாட்கள் தற்காலிகமாக தனிமைப்படுத்தலில் செய்ய முடிந்த ஒரே இடமான பஹ்ரைன் இருந்து வந்தது.

கொரோனா காரணமாக மற்ற பல நாடுகள் இதற்கு கடந்த சில மாதங்களாக தடைவிதித்துள்ளது. இந்நிலைதில் பஹ்ரைனில் குடியுரிமை விசா(பஹ்ரைன் நாட்டின் விசா) இல்லாதவர்களை நாட்டில் அனுமதிக்கக் கூடாது என்ற புதிய முடிவு இப்போது இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டவர்களுக்கு ஒரு பின்னடைவாகும். இந்த முடிவு சவுதி உள்ளிட்ட மற்ற வளைகுடா நாடுகளுக்கு செல்ல பஹ்ரைனை தற்காலிக புகலிடமாக கொண்டு பயணிக்கும் நண்பர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும், சவுதி அரேபியாவுக்குச் செல்வோர் இதுவரை பஹ்ரைனுக்கு வருகை தந்து பஹ்ரைன் வருகை விசா(Visit Visa) பெற்று 14 நாட்கள் தங்கியிருக்கிறார்கள் பின்னர் சவுதிக்கு புறப்பட்டு செல்வார்கள். அந்த ஒரு வாய்ப்பும் இப்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது பஹ்ரைன் நாட்டின் வேலை விசா அல்லது வேறு எந்தவிதமான விசாவும் கைவசம் இல்லாத வெளிநாட்டவர்களுக்கு வருகை(Visit) விசாக்களை வழங்க வேண்டாம் என்று பஹ்ரைன் முடிவு செய்துள்ளது. ஜூன்-3,2021 வரை தற்காலிக தடை அமலில் இருந்தாலும், கோவிட் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் இதை நீட்டிக்க வாய்ப்புள்ளது. இந்த முடிவு சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு புறப்பட பஹ்ரைன் Package Booking செய்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் பஹ்ரைன் இதுபோன்ற கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

Add your comments to Bahrain News

Thursday, May 20, 2021

இந்தியாவில் இருந்து பஹ்ரைனுக்கு வருபவர்களுக்கு 10 நாட்கள் தனிமைப்படுத்தல் என்ற தகவல் வெளியாகியுள்ளது

இந்தியாவில் இருந்து பஹ்ரைனுக்கு வருபவர்களுக்கு 10 நாட்கள் தனிமைப்படுத்தல் என்ற தகவல் வெளியாகியுள்ளது;தேசிய மருத்துவ குழு அணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது

Image:பஹ்ரைன் விமான நிலையம்

இந்தியாவில் இருந்து பஹ்ரைனுக்கு வருபவர்களுக்கு 10 நாட்கள் தனிமைப்படுத்தல் என்ற தகவல் வெளியாகியுள்ளது

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் மற்றும் இலங்கையில் இருந்து பஹ்ரைனுக்கு வரும் பயணிகள் 10 நாட்கள் தனிமைப்படுத்தலில் தங்க வேண்டும். தேசிய மருத்துவ குழு அணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த நாடுகளில் இருந்து வருபவர்கள் 10 நாட்கள் அவர்கள் வசிக்கும் இடத்தில் அல்லது தேசிய சுகாதார ஒழுங்குமுறை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டலில் தங்க வேண்டும். புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்குள் நடத்தப்பட்ட கோவிட் பரிசோதனையின் எதிர்மறை சான்றிதழை நாட்டில் நுழையும் நேரத்தில் சமர்ப்பிக்க வேண்டும். சான்றிதழில் QR குறியீடு கட்டாயமாக இருக்க வேண்டும்.

மேலும், பஹ்ரைனில் உள்ள விமான நிலையத்திற்கு வந்ததும், அதன் பின்னர் ஐந்தாம் மற்றும் பத்தாம் நாளில் என்று 3 கோவிட் பரிசோதனை செய்யப்பட வேண்டும். இதற்கிடையில், பஹ்ரைனில் 12 முதல் 17 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அவர்களுக்கு பைசல்-பயோ-என்டெக் தடுப்பூசி இவர்களுக்கு வழங்கப்படும்.

Add your comments to Bahrain News

Saturday, March 20, 2021

பஹ்ரைன் வழியாக சவுதியில் நுழையும் இந்தியர்களுக்கான வழியும் அடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

பஹ்ரைன் வழியாக சவுதியில் நுழையும் இந்தியர்களுக்கான வழியும் அடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது;On Arrival விசா பெற சவுதி விசா தகுதியானதா என்பதை உறுதி செய்த பின்னர் மட்டும் பயணம் செய்வது நல்லது

Image :Bahrain Airport

பஹ்ரைன் வழியாக சவுதியில் நுழையும் இந்தியர்களுக்கான வழியும் அடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

On Arrival விசாக்களை வழங்குவதற்கான நிபந்தனைகளை பஹ்ரைன் கட்டுபாடுகள் விதித்துள்ள நிலையில் இந்தியர்கள் உட்பட பல வெளிநாட்டவர்களுக்கு சவுதியில் நுழைவதற்கான தற்காலிக புகலிடமாக பஹ்ரைனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சிக்கித் தவிக்கும் சவுதி விசாக்கள் உள்ள வெளிநாட்டவர்கள் பஹ்ரைன் வழியாக சவுதி அரேபியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த நாடுகளில் பஹ்ரைனுக்கு வந்த இந்தியர்கள் பலரும் விசா கிடைக்காத நிலையில் மீண்டும் தாயகம் திரும்ப வேண்டியிருந்தது.

இந்தியாவில் இருந்து சவுதிக்கு நேரடி விமானங்கள் இல்லாததால், பயண தடை காரணமாக துபாய் வழியாக சவுதி செல்ல பயணிப்பவர்கள் அமீரகத்தில் சிக்கித் தவித்தனர். அவர்களில் பலர் பின்னர் ஓமான் மற்றும் பஹ்ரைன் வழியாக சவுதி சென்றனர். ஓமானில் ஹோட்டல் தனிமைப்படுத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், பயணச் செலவும் அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில்தான் பலர் பஹ்ரைன் வழியாகப் பயணிக்கும் வழியை தேர்ந்தெடுத்துள்ளனர். பஹ்ரைனில் 14 நாள் தனிமைப்படுத்தலை முடித்த பின்னர், கோவிட் எதிர்மறை சான்றிதழ் பெற்று (சவுதி-பஹ்ரைன்) காஸ்வே சாலை வழியாக சவுதி அரேபியாவுக்கு நுழைந்து வந்தனர். இப்படி நூற்றுக்கணக்கான இந்தியர்கள் சவுதிக்கு வந்து மீண்டும் வேலையில் சேர்ந்தனர். ஆனால் (19/3/2021)கடந்த நாள் முதல், பஹ்ரைன் அதிகாரிகள் On Arrival விசாக்களுக்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளனர்.

முன்னர் விதிமுறைகளின்படி குவைத், ஓமான் மற்றும் சவுதி விசாக்கள் வைத்திருப்பவர்கள் பஹ்ரைனில் வந்த பின்னர் On Arrival விசாக்களைப் பெறலாம். ஆனால் இது இப்போது உயர் பதவிகளில் பணிபுரிபவர்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தங்களது புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்ததை அடுத்து ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து பஹ்ரைனுக்கு வந்த பலரை அதிகாரிகள் நேற்று திருப்பி அனுப்பினர். இதன் மூலம் பல வெளிநாட்டவர்களுக்கு பஹ்ரைன் வழி சவுதியை அடைய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே பஹ்ரைன் வழியாக On Arrival விசா மூலம் சவுதியில் நுழைய முயற்சி செய்யும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் உங்களின் சவுதி வேலை விசா பஹ்ரைன் நாட்டின் On Arrival விசா கிடைக்க தகுதியான விசாவா என்பதை உறுதி செய்த பின்னர் மட்டும் பயணம் செய்வது நல்லது.

Add your comments to Bahrain News

Wednesday, February 10, 2021

பஹ்ரைனில் மசூதிகளில் பிரார்த்தனை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது

பஹ்ரைனில் மசூதிகளில் பிரார்த்தனை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது;கோவிட் பரவல் அதிகரித்து வருகின்ற நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது

Image credit: BNA

பஹ்ரைனில் மசூதிகளில் பிரார்த்தனை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது

பஹ்ரைனில் உள்ள மசூதிகளில் பிரார்த்தனை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த முடிவு பிப்ரவரி-11 நாளை முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கோவிட் பரவல் அதிகரித்து வருகின்ற நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் பஹ்ரைனில் சிகிச்சையில் இருந்த நான்கு பேர் கூட கோவிட் காரணமாக இறந்தனர். 719 நபர்களுக்கு புதிதாக கோவிட் உறுதிப்படுத்தப்பட்டது. இவர்களில் 323 பேர் வெளிநாட்டவர்கள். தற்போது 6036 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 46 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். மேலும் 461 பேர் குணமாகி வீடு திரும்பினர் எனவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Add your comments to Bahrain News

Wednesday, January 13, 2021

பஹ்ரைனில் சிறுமியின் மூக்கில் ஏதோ இருப்பதாக கூற,மருத்துவர்கள் பரிசோதனையில் அதிர்ச்சி காத்திருந்தது


16 வயது சிறுமி மூக்கில் ஏதோ அடைப்பு இருப்பதுபோல் உணர்கிறேன் என்று பஹ்ரைனில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனைக்கு வந்துள்ளார். தொடர்ந்து மருத்துவர்கள் சோதனையில் அதிர்ச்சி காத்திருந்தது,சிறுமி மூக்கில் முழுமையாக வளர்ச்சியடைந்த பல் இருப்பது கண்டறிப்பட்டது. இதையடுத்து ENT ஆலோசகர் மற்றும் பேராசிரியர் ஹெஷாம் யூசெப் ஹாசனின் வழிகாட்டுதலின் பேரில் கிங் ஹமாத் பல்கலைக்கழக வைத்து மருத்துவமனையில் பல் அகற்றப்பட்டது.  ஆப்டிகல் ஃபைபர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் மூக்கில் இருந்து பல் அகற்றப்பட்டது.  

முன்னர் மருத்துவமனையில் ஈ.என்.டி பிரிவுக்கு வந்த சிறுமி, மூக்குக்குள் அடைப்பு ஏற்பட்டு மூச்சுவிட முடியவில்லை எனவும், ஏதோ இருப்பதாக உணர்ந்ததாகவும் கூறினார்.  இதைத் தொடர்ந்து எண்டோஸ்கோபி மற்றும் சி.டி ஸ்கேன் பரிசோதனையில் மூக்குக்குள் பல் போன்ற ஒன்று இருப்பது தெரியவந்தது.  இது நாசிக்கு நடுவில் அமைந்திருந்தது. பேராசிரியர் ஹசன் வேறு எந்த பிரச்சனையும் இல்லாமல் பல் அகற்றப்பட்டு நோயாளியின் உடல்நிலை சீராக உள்ளது என்றார்.சூப்பர்நூமரி பல் என்று அழைக்கப்படும் இந்த வகை பல் உலகில் 100 முதல் 1000 பேரில் ஒருவருக்கு மட்டுமே காணப்படுகிறது என்றும், மூக்கில் பல் வளர்வது அரிது என்றும் அவர் கூறினார்.

Add your comments to Bahrain News

Sunday, January 3, 2021

பஹ்ரைனில் காஞ்சா கடத்தல் தொடர்பாக 2 பேருக்கு15 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

பஹ்ரைனுக்கு போதைப் பொருள் கடத்தப்பட்ட வழக்கில் மூன்று வெளிநாட்டவர்களை அதிகாரிகள் சிறையில் அடைத்தனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது. ஆயிரக்கணக்கான பஹ்ரைன்  தினார்கள் மதிப்புள்ள போதைப்பொருட்களை கடத்தியதாக 30 மற்றும் 35 வயதுடைய இரண்டு பங்களாதேஷ் ஆண்களுக்கு குற்றவியல் நீதிமன்றத்தால் 15 ஆண்டுகள் சிறை விதித்துள்ளது. அதே நேரத்தில் 26 வயதான பங்களாதேஷ் நபருக்கு 12 மாதங்கள் சிறை த‌ண்டனையும் விதித்து  நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


Add your comments to Bahrain News

Tuesday, December 15, 2020

பஹ்ரைன் தேசிய தினத்தை முன்னிட்டு குவைத்தின் முக்கிய வீதிகளில் இருநாட்டு கொடிகள் ஏற்றப்பட்டுள்ளது:

Dec-15,2020

குவைத்தின் முக்கியமான இடங்களில், வளைகுடா நாடுகளின் தேசிய தினம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளின் பொது அந்தந்த நாடுகளில் தேசிய கொடிகள் நட்பு அடிபடையில் ஏற்றப்படுவது வழக்கம். நாளை டிசம்பர்-16  மற்றும் 17-ஆம் தேதிகளில் பஹ்ரைன் தன்னுடைய 49-வது தேசிய தினத்தை கொண்டாடுகிறது.

இதை தொடர்ந்து மக்கள் அதிகமாக வந்து- செல்லும் பகுதிகளான Mubarakiya சுற்றியுள்ள Al-Gharabally Market , Al Sararif Market மற்றும்  Prince Street உள்ளிட்ட பல இடங்களில் இரண்டு நாடுகளின் தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது.




Add your comments to Bahrain News

Tuesday, December 8, 2020

நண்பர்கள் அதிர்ச்சி;சிலமணி நேரத்திற்கும் முன்பு உடன்இருந்த நண்பர் தற்போது இல்லை:

நண்பர்கள் அதிர்ச்சி;சிலமணி நேரத்திற்கும் முன்பு உடன்இருந்த நண்பர் தற்போது இல்லை:

(தற்கொலை செய்த விஷ்ணு-27)

Dec-8,2020

வளைகுடா நாடுகளில் ஒன்றான பஹ்ரைனில் சல்மாபாத் பகுதியில் உள்ள இந்தியர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். தங்களுடைய அன்பான நண்பரின் எதிர்பாராத மறைவே இதற்கு காரணம். இந்திய் கேரளா திருச்சூர் நகரைச் சேர்ந்தவர் விஷ்ணு(வயது-27),நேற்று அவரது குடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

அவருடன் தங்கியிருந்த பினு, வளைகுடா டெய்லி நியூஸிடம் கூறுகையில், விஷ்ணு தினசரி காலையில் நடைபயிற்சி செல்வது வழக்கம், நேற்றையதினமும் வழக்கம்போல் சென்று வந்தார், அவருடன் சேர்ந்தே உட்கார்ந்து சாப்பிட்டதாகவும், ஆனால் அசாதாரணமானது எதுவும் அவனிடம் தெரியவில்லை என்றும் கூறினார்.  

மரண செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தார் எனவும் தன்னால் இது ஒருபோதும் நம்ப முடியவில்லை என்று அவர் கண்கலங்கினார். மேலும் அவர் கூறுகையில் அலுவலகத்திற்கு வந்து 10 நிமிடங்களில் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. காரில் இருந்து எதையோ எடுக்கப்போவதாகக் கூறி அலுவலகத்தை விட்டு விஷ்ணு வெளியேறினார்.

தொடர்ந்து வினு கூறும்போது காலை வேலைக்கு வந்த விஷ்ணு 9.30 மணிக்கு அலுவலகத்தை விட்டு  புறப்பட்டதாக உடன் வேலை செய்யும்  நண்பர்கள் தெரிவித்தனர். வெளியே சென்ற விஷ்ணுவை காணாமல் காலை 10 மணியளவில் தன்னுடைய நண்பரின் தொலைபேசியில் இருந்து அவரை தொடர்பு கொண்டார். அப்போது  விஷ்ணு அவர்களுக்கு விடைபெறுகிறேன்(Goodbye) என்று ஒரு செய்தியை அனுப்பியதாக கூறினார்.

இயற்கைக்கு மாறானதாக நண்பர் அனுப்பிய செய்தியில் சந்தேகம் அடைந்து நண்பர்கள் குடியிருப்புக்கு விரைந்தனர்.  அவர்கள் கதவை உடைத்து உள்ளே நுழைந்தபோது விஷ்ணு தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். அவர்கள் அனைவரும் தங்கி வேலைக்குச் சென்று கொண்டிருந்த குடியிருப்பின் அறையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இவர் தற்கொலைக்கான காரணம் நண்பர்களுக்கு புரியாத புதிராகவே இருக்கிறது.

விஷ்ணு அங்கு சுமார் ஆறு ஆண்டுகள் வேலை செய்து வருகிறார். உடல் சல்மேனியா மருத்துவ சவக்கிடங்கிற்கு மாற்றப்பட்டது. சட்ட நடவடிக்கைகள் முடித்து உடல் புதன்கிழமை வீட்டிற்கு அனுப்பப்படும் என்று நண்பர்கள் மற்றும் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Add your comments to Bahrain News

Friday, November 13, 2020

பஹ்ரைனின் உலகின் மிக நீண்ட காலம் பணியாற்றிய பிரதமர் கலீஃபா பின் சல்மான் உடல் அடக்கம் செய்யப்பட்டது:

பஹ்ரைனின் உலகின் மிக நீண்ட காலம் பணியாற்றிய பிரதமர் கலீஃபா பின் சல்மான் உடல்  அடக்கம் செய்யப்பட்டது:


நவம்பர்-13,2020

உலகின் மிக நீண்ட காலம் பிரதமராக பணியாற்றிய இளவரசர் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபாவை அவரது உடல் அமெரிக்காவிலிருந்து நேற்று புதன்கிழமை கொண்டுவரப்பட்டது. கலீஃபா அவர்கள் பஹ்ரைன் நாடு 1971-ல் பிரிட்டனில் இருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து

தன்னுடைய மாமா கிங் ஹமாத் பின் ஈசா அல் கலீஃபாவின் ஆட்சி காலம்  முதல் தற்போது வரையில் பிரதமராக பணியாற்றினார். பஹ்ரைன் நாட்டை அல்-கலீஃபா குடும்பம் 1783 முதல் ஆட்சி செய்து வருகிறது. கலீஃபா அவர்கள் மறைவையொட்டி சிறிய வளைகுடா நாடான பஹ்ரைனின் புதிய பிரதமராக கிரீடம் இளவரசர் சல்மான் பின் ஹமாத் அல் கலீஃபாவை(வயது-51), மன்னர்  கிங் ஹமாத் புதன்கிழமை நியமித்தார்.

இன்று சற்றுமுன் நடைபெற்ற உடல் நல்லடக்க நிகழ்வில் கொரோனோ வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கை அடிப்படையில் அரச குடும்ப உறுப்பினர்கள், பஹ்ரைன் பாதுகாப்பு படை, உள்துறை அமைச்சகம் மற்றும் தேசிய காவல்படையின் மூத்த பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஒரு சிறிய நிகழ்வாக ரிஃபாவில் உள்ள ஹுனைனியா கல்லறை தோட்டத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது என்று மாநில செய்தி நிறுவனம் பி.என்.ஏ தெரிவித்துள்ளது.

Editor: Ktpnews Official 

Add your comments to Bahrain News

Thursday, November 12, 2020

பஹ்ரைனின் கிரீடம் இளவரசர் சல்மான் அல் கலீஃபாவை புதிய பிரதமராக நியமனம்:

பஹ்ரைனின் கிரீடம் இளவரசர் சல்மான் அல் கலீஃபாவை புதிய பிரதமராக நியமனம்:


நவம்பர்-12,2020


(New Bahrain Salman Al Khalifa)


பஹ்ரைன் மன்னர் ஹமாத் பின் ஈசா அல் கலீஃபா அவரக புதிய பிரதமராக கிரீடம் இளவரசர் சல்மான் அல் கலீஃபாவை நியமித்துள்ளார் என்று அரச செய்தி நிறுவனம் புதன்கிழமை(நேற்று) செய்தி வெளியிட்டுள்ளது.

இளவரசர் கலீஃபா பின் சல்மான் நோய்வாய்ப்பட்ட காலகட்டத்தில், புதன்கிழமை, இளவரசர் சல்மான் பின் ஹமாத் அல் கலீஃபா, அமைச்சர்கள் குழுவின் கடைசி கூட்டத்திற்கு  தலைமை தாங்கினார்.  கிரீடம் இளவரசர் சல்மான் பின் ஹமாத் அல் கலீஃபா பிரதமராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் முதல் துணை பிரதமர் பதவியை வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


(Death Ex.PM Sheikh Khalifa Bin Salman Al Khalifa)

மரணம் குறித்த அந்த நேரத்தில் வெளியிட்டது செய்தி விரிவாக பார்க்க Link:https://ktpnews.blogspot.com/2020/11/blog-post_11.html

இதையடுத்து புதிய பிரதமர் நியமனம் குறித்த ஆணை உடனடியாக நடைமுறைக்கு வருகிறது என்று அறிக்கையில்  தெரிவித்துள்ளது. பஹ்ரைனின் மறைந்த பிரதமர் ஷேக் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா புதன்கிழமை அமெரிக்காவின் மருத்துவமனையில் காலமானார்.  



Add your comments to Bahrain News

Wednesday, November 11, 2020

பஹ்ரைன் நாட்டின் பிரதமர் இன்று மரணமடைந்தார் என்ற துயரமான செய்தி சற்றுமுன் வெளியாகியுள்ளது:

பஹ்ரைன் நாட்டின் பிரதமர் இன்று மரணமடைந்தார் என்ற துயரமான செய்தி சற்றுமுன் வெளியாகியுள்ளது:



நவம்பர்-11,2020

பஹ்ரைன் நாட்டின் பிரதமர் ஷேக் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா இன்று புதன்கிழமை காலையில் அமெரிக்காவில் உள்ள மாயோ கிளினிக் மருத்துவமனையில் மரணமடைந்தார் என்று செய்தி சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த தகவலை அந்த நாட்டின் நியூஸ் ஏஜென்சி(BNA) வெளியிட்டுள்ளது. 

இதையடுத்து பஹ்ரைன் மன்னர் ஹமாத் பின் ஈசா அல் கலீஃபா ஒரு வாரத்திற்கு நாட்டில் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும், தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

மேலும் நாளை வியாழக்கிழமை துவங்கி அரசாங்கத் துறையின் பணிகள் அனைத்தும் மூன்று நாட்களுக்கு இடைநிறுத்தவும் உத்தரவிட்டார். இதையடுத்து நாட்டில் மூன்று நாட்கள் அரசு விடுமுறையாக இருக்கும் என்று தெரிகிறது.

அவரது உடல் தாயகம் வந்தபின் இறுதி சடங்குகள் நடைபெறும் என்றும், கடவுள் அவருக்கு இரக்கம் காட்டட்டும் எனவும், இறுதி சடங்கு நிகழ்வில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உறவினர்களுக்கு மட்டுமே கலந்து கொள்வார்கள்  என்றும் அவர் கூறினார். 

Reporting by Ktpnews Official 


Add your comments to Bahrain News

Monday, August 26, 2019

பஹ்ரைன் சிறையிலிருந்து 250 இந்தியர்கள் விடுதலை; பஹ்ரைன் அரசுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்:

பஹ்ரைன் சிறையிலிருந்து 250 இந்தியர்கள் விடுதலை; பஹ்ரைன் அரசுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்:

பிரதமர் மோடியின் பஹ்ரைன் வருகையை தொடர்ந்து, நல்லெண்ண அடிப்படையில்  அரசர் ஹமாத்-பின்-இசை-பின்-சல்மான் அவர்களால் பல்வேறு குற்றங்களில் சிறையில் இருந்து 250 இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் எத்தனை இந்தியர்கள், பஹ்ரைன் சிறைகளில் மொத்தம் தண்டனை அனுபவித்து வருகின்றனர் என்பது குறித்து கூடுதல் தகவல்கள் தெரியவில்லை.

அதேநேரத்தில், வெளிநாடுகளில் பல்வேறு குற்றங்களில் 8 ஆயிரத்து 189 இந்தியர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் அதிகபட்சமாக சவுதியில் ஆயிரத்து 811 இந்தியர்களும், ஐக்கிய அரபு எமீரேட்சில் ஆயிரத்து 392 இந்தியர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பஹ்ரைன் முடிவுக்கு வரவேற்பு தெரிவித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், மனித நேய அடிப்படையில், பஹ்ரைன் அரசு, அந்நாட்டு சிறையில் உள்ள 250 இந்திய கைதிகளை விடுதலை செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பஹ்ரைன் அரசுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

Add your comments to Bahrain News